சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரூ.14
லட்சம் செலவில் இரு புதிய பேருந்துகள்
வாங்கப்பட்டுள்ளன. இப் பேருந்துகளை பல்கலைக்கழக
நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா புதன்கிழமை மாணவர்களின்
பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள்
விடுதியிலிருந்து வகுப்புகளுக்குச் செல்லவும்,
பயிற்சி முகாம்கள் உள்ளிட்ட பணிகளுக்குச் செல்லவும்
வசதியாக பல்கலைக்கழக நிர்வாகம், தமிழக அரசின்
விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழகத்திடமிருந்த
ு ரூ.14 லட்சம் செலவில் இரு பேருந்துகளை
வாங்கியுள்ளது.
இந்த இரு பேருந்துகளின் சேவையை பல்கலைக்கழக
நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா புதன்கிழமை தொடங்கி
வைத்தார்.
மேலும், பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் செலவில்
புதிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் வாங்கப்பட்டுள்ள
து.
இதன் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர்
ஜெ.வசந்தகுமார், மருத்துவமனை கண்காணிப்பாளர்
எஸ்.ரமேஷ் மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், பல்கலைக்கழக நிர்வாகி
ஷிவ்தாஸ்மீனா செய்தியாளர்களிடம் கூறியது:
பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையின் செயல்பாடுகளை மேம்படுத்த,
நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க ரூ1.35
கோடி செலவில் சி.டி.ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ள
து. மேலும், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நவீன அவசர
சிகிச்சை வாகனமும் வாங்கப்பட்டு பயன்பாட்டில்
உள்ளது.
மருத்துவமனையில் டயாலசிஸ் சிகிச்சைக்காக ரூ.30
லட்சம் மதிப்பிலான 4 டயாலசிஸ் யூனிட்கள் மற்றும்
ரூ.28 லட்சம் செலவில் நான்கு வென்டிலேட்டர்,
குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ரூ.21
லட்சம் மதிப்பில் 3 புதிய வென்டிலேட்டர் கருவிகள்
பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் சிசுக்கள் மற்றும் குழந்தைகளின் சுவாசக்
கோளாறு, பிறப்பிலேயே ஏற்படும் இதய கோளாறுகள்,
பாம்பு, தேள்கடி விஷம் நீக்குதல், இதர பூச்சிக்
கொல்லிகள் மூலம் ஏற்படும் கோளாறுகளுக்கு
சிகிச்சை அளிக்க மிகவும் உதவியாக இருக்கும்
என்றார் அவர்.
நன்றி: தினமணி ஜி.சுந்தரராஜன்
No comments:
Post a Comment