Saturday, 30 May 2015

M.Sc Agri, Horti, MBA applications are released

M.Sc Agri, Horti, MBA Agribusiness applications are released

Issue of applications on 28.05.2015

Last date for applying 30.06.2015

Application cost

SC/ST ₹500
General ₹1000

Reunion meet of Agri 1965 batch

Today 1965 year old students done a reunion meet (get together) after 50 years !!

Congratulations and salute to our very old seniors

உண்மையிலேயே மிகவும் நெகிழ்வான தருணம் இது !!!

Most memorable and feeling day !!

Tuesday, 26 May 2015

Student's creations 011 - G.K.Dinesh


வசந்த காலம் ! - கவிதை : ஜி.கே.தினேஷ்


எங்கிருந்தோ வந்தோம் 
நம்முள் ஒன்றானோம் 

வசந்த காலங்கள் ஆயின
நான்காண்டுகள்

வகுப்பறையில் அரட்டை 
பாடவேளையில் குறட்டை 

நாங்கள் மாற்றிக் கொண்டது
சட்டைகளை அல்ல-இதயங்களை !

எப்போதாவது அடிதடி 
அடுத்த நொடியே இணைந்தபடி !
எத்தனை இனிமையடா நம் கல்லூரி காலம் !

பல கைகள் ஒரே தட்டில் இருந்தும் நிறையும் மனசு !

நீரிழிவு நோயாளிகள் போல 
தினமும் அதிகாலையில் ஓட்டமும் நடையுமாய் வகுப்புக்கு..! 

துருப்பு சீட்டெடுத்து பிட்டடித்த தேர்வுகள்..

ஆண்டுகள் கழிந்தாலும் அரியர்கள் கழிவதில்லை.. 

கர்ப்பத்திலே கலைந்து போன காதல் காவியங்கள்..

வகுப்பறை மேஜை எங்கும் எங்கள் தோழர்களின் ஓவியங்கள்..

அடித்தாலும் பிடித்தாலும் அன்பு குறைய ஜூனியர்ஸ்..

சொந்தமாய் மாறி போன ஆசிரியர்கள்.. 

சற்றும் சளைக்காத அக்ரி ராக்கிங் சல்யூட்கள்.. 

நடுநிசி பிறந்தநாள் கொண்டாட்டங்கள்.. 

எம்.சி.காக ஏங்கிய ட்ரீட்கள்..

தாமரை இல்லத்து வாசலில் தவம் கிடக்கும் முனிவர்கள் நாங்கள்..

தீர்த்தமாய் மாறி போன பீர் பாட்டில்கள்..

நண்பர்கள் வீட்டு விசேஷங்கள் நம் வீட்டு விசேஷங்களாய்..

வீட்டில் ஏற்பட்ட சோகத்தையும் 
கல்லூரியில் ஏற்பட்ட சுகத்தையும் கொண்டாடினோம் !


இப்படி சுகத்தையும் சோகத்தையும் பங்கிட்டு கொண்டதால் தான் நாம் "பங்காளிகள்"!

சொந்த மச்சானை மச்சான் என்று கூப்பிட்டால் கூட தங்கையை கேட்டு விடுவானோ என ஏற இறங்க பார்க்கும் இக்காலத்தில் வாய் நிறைய "மச்சான்" என உரிமை கொண்டாடினோமே !

உறவுகள் கூட மகிழ்ச்சியான தருணத்தில் தான் பங்கெடுக்கும்
ஆனால் உன் நட்பு அனைத்திலும் பங்கெடுத்ததடா !

அதனால் தான் நாம் உறவுகள் அல்ல 
 "உணர்வுகள்"

உலகில் எந்த மூலையில் இருந்தாலும்
வாட்ஸாப்பும், பேஸ் புக்கும் போதும் நமக்கு ஆறுதல்
சொல்ல ...

என்னுடைய வாட்ஸ் ஆப் எண் : +91-8428719080

என்னுடைய பேஸ்புக் : Gk Dinesh Kavipaadi
கவிதை : ஜி.கே.தினேஷ்





. . . ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ »»»»»»»»Aufastudents@gmail.com««««««« Www.facebook.com/AnnamalaiUniversityFacultyOfAgriculture

Practical schedule and allotment for third years 2015

Here is the practical list allotment for third years
.
.
Please Share to all...........
.
.






















. . . ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ »»»»»»»»Aufastudents@gmail.com««««««« Www.facebook.com/AnnamalaiUniversityFacultyOfAgriculture

Saturday, 23 May 2015

SPIC Campus interview

🌹🌹GOLDEN OPPURTUNITY-JOBS🌹🌹

SPIC (Southern Petrochemical Industries Corp Ltd)

Recruitment : 50 posts.

Salary : ₹20,000

Campus interview Venue : A/c seminar hall.

Resume should be submitted within Monday evening to training and placement cell.

Register your name to Mr.Subash 9698171502 within Sunday evening.

It is a wonderful opportunity please all of you use it.

For more details visit www.aufastudents.blogspot.com

Wednesday, 20 May 2015

ICAR results 2015 announced

BREAKING NEWS

ICAR EXAMS RESULTS ANNOUNCED !!!

Check it out here

http://icarexam.net/

* www.aufastudents.blogspot.com *

Student's creations 010 - G.K.DINESH

இனி வரும் காலமும் வருங்காலமும் !! - கவிதை

இந்த நான்கு ஆண்டுகள் பழகி கழித்தோம்
இனிவரும் ஆண்டுகள் எப்படி உன்னை பார்க்காமல் கழியும் ??

இனி புகைப்படத்தில் மட்டுமே சிரிப்பொலியை கேட்க முடியும்

எடுத்துக் கொண்ட புகைப்படங்களோடு மீதி வாழ்க்கையை வாழ வேண்டி வரும்

இனி சாப்பாட்டு தட்டில் ஒரு கை மட்டுமே இருக்கும் அதுவும் உன் கையாக தான் இருக்கும்

ஸ்லாம் புக்கை திருப்பி பார்த்து பார்த்து பேப்பரில் அழுக்கேறி இருக்கும்

நாளாக நாளாக எழுத்துக்கள் கூட அழிந்து விடும்

இருந்தாலும் உண்மை நண்பனின் நினைவுகள் என்றுமே அழியாமல் நிலைத்திருக்கும்

போனில் உள்ள அலாரம் இனி தேவைப்படாது

இனி வித விதமான சட்டைகளை அணிய முடியாது

அப்படியே அணிந்தாலும் அதில் நண்பனின் வியர்வை வாடை இருக்காது

விண்ணை பிளந்த விசில் சத்தம் இருக்காது

சுதந்திரமாய் திரியும் பறவைகளை பார்த்து பொறாமை பட வேண்டி வரும்

எப்போது எடுத்து எழுதுவோம் என பேனா கூட அழ கூடும்

தினமும் வேலைக்கு செல்ல வேண்டி வரும்

பீர் பாட்டில் பிராந்தி பாட்டில் ஆகும்

எந்த கட்டாயத்திற்காகவும், யாருடைய கட்டாயத்திற்காகவும் இனி புத்தகத்தை எடுக்க தேவையில்லை

அப்பா அம்மா என்ன தான் கனிவுடன் பேசினாலும் குற்றவுணர்வு இருக்கும்

இனிவரும் பிறந்த நாட்களை யார் கொண்டாடுவார்கள்??

நள்ளிரவில் யார் மூஞ்சியில் கேக் பூசி விளையாடுவது ??

மழை வந்தால் யாருடன் நனைந்து விளையாடுவது ??

நாலு வருடங்கள் பழகிய நண்பர்களை பிரியவே  கஷ்டப்படுகிறோம் நாம்

ஒவ்வொரு வருடமும் நான்கு வருடங்கள் பழகிய நண்பர்களை பிரியும் கல்லூரியை நினைத்து பார்த்து மனதை தேற்றி கொள்ள தோன்றும்

இனி ஆட்டம் இருக்காது

இசை இருக்காது. இருந்தாலும் ரசிக்க தோணாது

கால் கிலோமீட்டர் நடக்க கூட மூச்சு வாங்கும்

மீண்டும் கல்லூரிக்கு செல்ல முடியாதா என மனது துடிக்கும்

வார்த்தைகள் பல இருந்தும் பேசுவதற்கு வார்த்தைகளை தேட வேண்டி வரும்

தொண்டை கனக்கும்
உடல் விம்மும்
நாடி துடிக்கும்
உதடு உதறும்
பேச்சு பதறும்

கைகள் தோள்களை தேடும்
ஒன்றாய் சுற்ற கால்கள் தேடும்

காட்டிலிருந்து வெட்டி வீசப்பட்ட தனிமரமாய் தனிமையில்

நாலு ஆண்டுகள் யாரிடம் பழகாமல் இருந்திருக்கலாமோ எனக் கூட தோன்றும்

யார் யாருக்கு எப்படிப்பட்ட மனைவி/கணவன் என்பதை பொறுத்து தான் இனி நம் நட்பும் !!!

இனி வரும் காலமும், வருங்காலமும் நல்லதாகவே அமையட்டும்.....................

வாழ்த்துகள் !!

-கண்ணீருடன்,
ஜி.கே.தினேஷ்
இறுதியாண்டு இளமறிவியல் வேளாண்மை
2011-2015
17.05.2015 இரவு 11.45 மணி

Tuesday, 12 May 2015

Admission starts !!

அண்ணாமலைப் பல்கலைகழக மாணவர் சேர்க்கை

அண்ணாமலை பல்கலைகழகத்தில்
மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.),
பல் மருத்துவம் (பி.டி.எஸ்.), பி.எஸ்சி. (விவசாயம்),
பி.எஸ்சி. (தோட்டக்கலை) படிப்புகளுக்கான 2015-16-ம்
ஆண்டுக்கான அனுமதி சேர்க்கை கையேடு மற்றும்
விண்ணப்ப விற்பனையை நிர்வாக அலுவலகத்தில்
மாணவி ஒருவருக்கு வழங்கி ஷிவ்தாஸ்மீனா தொடங்கி
வைத்தார்.

மே 14 முதல் விண்ணப்பங்கள்: விண்ணப்பங்களை
அண்ணாமலை நகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக
அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து
தொலைதூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும்
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு ரூ.1,500
செலுத்தியும், பி.எஸ்சி. (வேளாண்மை) மற்றும்
தோட்டக்கலை படிப்புக்கு ரூ.800 (எஸ்.சி., எஸ்.டி.
பிரிவினருக்கு ரூ.400) செலுத்தியும் வருகிற மே 14-
ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
அஞ்சல் மூலம் விண்ணப்பம்: அஞ்சல் மூலம் எம்.பி.பி.எஸ்.,
பி.டி.எஸ். விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் ரூ.1,550-ம்
(ரூ.50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) மற்றும் பி.எஸ்சி.
வேளாண்மை, தோட்டக்கலை விண்ணப்பம் பெற
விரும்புபவர்கள் ரூ.850-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்
ரூ.450-ம் (ரூ50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) சென்னையில்
மாற்றத்தக்க வங்கி வரைவோலையை, எடுத்து
"பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர்-608 002, சிதம்பரம் என்ற' முகவரிக்கு
அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்: மருத்துவம்
மற்றும் பல் மருத்துவம் அனுமதி சேர்க்கை குறித்து
பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா
கூறியதாவது:
2015-16ம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலையில்
எம்.பி.பி.எஸ். 150 இடங்களுக்கும், பி.டி.எஸ். 100
இடங்களுக்கும், பி.எஸ்சி. வேளாண்மை 1,000
இடங்களுக்கும், பி.எஸ்சி. தோட்டக்கலை 70
இடங்களுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
மாணவர்கள் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு
தேர்ந்தெடுக்கப்படுவர்.
தமிழக அரசின் இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள்
மேல்நிலைப் படிப்பு அல்லது அதற்கு இணையான
படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும்
சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.
சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற
மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கலந்தாய்வுக்கு
அழைக்கப்படுவர். கலந்தாய்வு விவரம் பின்னர்
அறிவிக்கப்படும்.
மருத்துவப் படிப்புக்கு தனியாகவும், பல் மருத்துவப்
படிப்புக்கு தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
இப் படிப்புகளுக்கான கலந்தாய்வும் தனித்தனியே
நடத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளரும், வேளாண்புல
முதல்வருமான ஜே.வசந்தகுமார், பல்கலைக்கழக மாவட்ட
வருவாய் அதிகாரிகள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்,
ரத்தினசாமி, ஸ்ரீமாலினி, மருத்துவப்புல முதல்வர்
பிரசாத், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி
மற்றும் அனைத்து புல முதல்வர்கள், துறைத்
தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு கட்-ஆஃப் விவரம்:

எம்.பி.பி.எஸ்.: பொது (ஞஇ)- 197.75, பிற்படுத்தப்பட்டோர்
(ஆ.இ.)- 197.50 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ங.ஆ.இ.)-
196.25, ஆதிதிராவிடர் (ந.இ.)- 192.25.
பி.டி.எஸ். கட்-ஆஃப்: பொது- 195.5, பிற்படுத்தப்பட்டோர்
-190, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்- 185.75, ஆதிதிராவிடர்
- 178.25.
பி.எஸ்சி. வேளாண்மை கட்-ஆஃப்: பொது- 188.5,
பிற்படுத்தப்பட்டோர்- 182.05, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் -
183.25, ஆதிதிராவிடர்- 172.05.

மாணவர் சேர்க்கை கையேடு:

வெளிநாட்டு
பல்கலைக்கழகத்தில் உள்ளது போல் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.,
பி.டி.எஸ்., பி.இ., பி.எஸ்.சி. வேளாண்மை ஆகிய
படிப்புகளுக்கான விண்ணப்பத்துடன் அனுமதி
சேர்க்கை கையேடு ஆயில் பேப்பரில், மாணவ,
மாணவிகள் எளிதில் புரிந்து கொண்டு தாங்களே
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில்
அச்சடிக்கப்பட்டு விண்ணப்பத்துடன் வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் மற்றும் அனுமதி சேர்க்கை குறித்த
விவரங்களுக்கு பல்கலைக்கழக உதவி மைய
தொலைபேசி எண்கள் 04144-238348, 238349 ஆகியவற்றை
தொடர்பு கொண்டும் தகவல்களை பெறலாம் என பல்கலை
நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நன்றி : தினமணி ஜி.சுந்தர்ராஜன்

Monday, 11 May 2015

Great scope for agricultural courses after completing +2

Read this article and know about future scope on Agricultural studies!!! 





.
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ »»»»»»»»Aufastudents@gmail.com««««««« Www.facebook.com/AnnamalaiUniversityFacultyOfAgriculture

Sunday, 10 May 2015

Admission, total number of seats and application form for B.Sc agriculture and horticulture


2015-16 ஆண்டில் அண்ணாமலைப் பல்கலையில் எம்பிபிஎஸ் 150 இடங்களும், பிடிஎஸ் 100 இடங்களும், பிஎஸ்சி வேளாண்மை 1000 இடங்களும், பிஎஸ்சி தோட்டக்கலை 70 இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை செய்யப்படுவார்கள். மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே அனுமதி சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்விண்ணப்பங்கள் மற்றும் அனுமதி சேர்க்கை குறித்த விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in பார்த்து தெரிந்து கொள்ளலாம். auadmission2015@gmail.com மற்றும் பல்கலைக்கழக உதவி மைய தொலைபேசி எண்கள் 04144- 238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



TOTAL SEATS

MBBS 150 SEATS
BDS 100 SEATS
BSC AGRI 1000 SEATS
BSC HORTI 70 SEATS



APPLICATION COST

SC, SCA, ST ₹400
OTHERS ₹800

Application available from 14.05.2015 to 12.06.2015

Last date for submission 12.06.2015

ADMISSION IS STRICTLY BASED ON MERIT BY COUNSELLING


Online application available at www.Annamalaiuniversity.ac.in







~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ »»»»»»»»Aufastudents@gmail.com««««««« Www.facebook.com/AnnamalaiUniversityFacultyOfAgriculture