வசந்த காலம் ! - கவிதை : ஜி.கே.தினேஷ்
எங்கிருந்தோ வந்தோம்
நம்முள் ஒன்றானோம்
வசந்த காலங்கள் ஆயின
நான்காண்டுகள்
வகுப்பறையில் அரட்டை
பாடவேளையில் குறட்டை
நாங்கள் மாற்றிக் கொண்டது
சட்டைகளை அல்ல-இதயங்களை !
எப்போதாவது அடிதடி
அடுத்த நொடியே இணைந்தபடி !
எத்தனை இனிமையடா நம் கல்லூரி காலம் !
பல கைகள் ஒரே தட்டில் இருந்தும் நிறையும் மனசு !
நீரிழிவு நோயாளிகள் போல
தினமும் அதிகாலையில் ஓட்டமும் நடையுமாய் வகுப்புக்கு..!
துருப்பு சீட்டெடுத்து பிட்டடித்த தேர்வுகள்..
ஆண்டுகள் கழிந்தாலும் அரியர்கள் கழிவதில்லை..
கர்ப்பத்திலே கலைந்து போன காதல் காவியங்கள்..
வகுப்பறை மேஜை எங்கும் எங்கள் தோழர்களின் ஓவியங்கள்..
அடித்தாலும் பிடித்தாலும் அன்பு குறைய ஜூனியர்ஸ்..
சொந்தமாய் மாறி போன ஆசிரியர்கள்..
சற்றும் சளைக்காத அக்ரி ராக்கிங் சல்யூட்கள்..
நடுநிசி பிறந்தநாள் கொண்டாட்டங்கள்..
எம்.சி.காக ஏங்கிய ட்ரீட்கள்..
தாமரை இல்லத்து வாசலில் தவம் கிடக்கும் முனிவர்கள் நாங்கள்..
தீர்த்தமாய் மாறி போன பீர் பாட்டில்கள்..
நண்பர்கள் வீட்டு விசேஷங்கள் நம் வீட்டு விசேஷங்களாய்..
வீட்டில் ஏற்பட்ட சோகத்தையும்
கல்லூரியில் ஏற்பட்ட சுகத்தையும் கொண்டாடினோம் !
இப்படி சுகத்தையும் சோகத்தையும் பங்கிட்டு கொண்டதால் தான் நாம் "பங்காளிகள்"!
சொந்த மச்சானை மச்சான் என்று கூப்பிட்டால் கூட தங்கையை கேட்டு விடுவானோ என ஏற இறங்க பார்க்கும் இக்காலத்தில் வாய் நிறைய "மச்சான்" என உரிமை கொண்டாடினோமே !
உறவுகள் கூட மகிழ்ச்சியான தருணத்தில் தான் பங்கெடுக்கும்
ஆனால் உன் நட்பு அனைத்திலும் பங்கெடுத்ததடா !
அதனால் தான் நாம் உறவுகள் அல்ல
"உணர்வுகள்"
உலகில் எந்த மூலையில் இருந்தாலும்
வாட்ஸாப்பும், பேஸ் புக்கும் போதும் நமக்கு ஆறுதல்
சொல்ல ...
என்னுடைய வாட்ஸ் ஆப் எண் : +91-8428719080
என்னுடைய பேஸ்புக் : Gk Dinesh Kavipaadi
கவிதை : ஜி.கே.தினேஷ்
. . . ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ »»»»»»»»Aufastudents@gmail.com««««««« Www.facebook.com/AnnamalaiUniversityFacultyOfAgriculture
No comments:
Post a Comment