Friday, 8 May 2015

Bon Voyage to our beloved Shiv Das Meena IAS sir

Here are the collection of Shiv Das Meena sir photos and sent off greetings!!! 



Dr. R.JOHN CHRISTY

ASST. PROFESSOR
DIVISION OF ANIMAL HUSBANDRY

Dear Sir ,
Nothing I can say will ever convey the amount of gratitude, We owe to
you.
As you bid farewell from our University, I take this opportunity to thank
you for all the guidance, help and support you have provided us. You
have always taken effort in making our work efficient with integrity and
pride.
Big thanks for putting the needs of your employees ahead of those of
the your own.
We often take for granted the very things that most deserve our
gratitude.

Apart from the decision making, communication and overall
professionalism, the most important thing I have learnt from you is
how to be a good human being. Thanks for showing us that respect is
always deserved, never commanded or forced.Probably no greater
honor can come to any man than the respect from his colleagues
The greatest gift anyone can give another person: believing in them.
You did that.
Thank you for all the little things that you did. I know that everyone
sees the big things you did each day and the major decisions that you
made. However, I want to thank you, Sir,for the little ways that you
make our University like a family. Each encouraging word you give is
worth so much.
We are very very proud of you, Sir.
You are my dream boss... Now I regret that why I didn't select civil
service as my career option .
May God continue to bless you and your family.




ARUNACHALAM SHANMUGAM 


பல்கலைக் கழகத்தின் பழம்பெரும் விடுதலைப் போராளி
டாக்டர் சண்முகம் அவர்களின் வாழ்த்துமடல்!


சிவதாஸ் மீனா அவர்கள் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் நிர்வாகியாக இருந்த காலம்,நம்
பல்கலைக்கழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால்
பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.அந்த காலகட்டத்தில் அவர்
நிர்வாகியாக இல்லை என்றால் நமது பல்கலைக்கழகம்
எந்த்ததிசையில், எப்படி சென்றிருக்கும் என்று
நினைத்துப்பார்க்வே அச்சமாக இருக்கிறது.

அந்த
இக்கட்டான காலகட்டத்தில்,பல்கலைக்கழகம்
எந்தத்திசையில், எப்படி, எந்த வேகத்தில் செல்லவேண்டும்
என்று துல்லியமாக க்கணித்து வழிநடத்தியவர்
அவர் ஒரு சிறந்த நிர்வாகிக்கு,ஒரு சிற்ந்த
நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு.
சிவதாஸ் மீனா அவர்களே, நீங்கள் என்றென்றும் எங்கள்
நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள.
எங்கிருந்தாலும் வாழ்க.



Dr.C.SUBRAMANIAM

AUTA CHAIRMAN

இது உங்கள் சாதனை இல்லையா?
------------/--------------+-----------------
நீங்கள் வந்த பின்பு தான் தலை நிமிர்ந்தோம்..!.
பல்கலையின் பாரம்பரியம் மீட்டெடுத்தோம்..!.
தில்லை மாநகரில் எல்லையில்லா கொண்டாட்டம்.
அறிவுத் திருக்கோவிலுக்கும்,
ஆன்மீகத் திருக்கோவிலுக்கும் கும்பாபிஷகம்.
எல்லோருக்கும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்,
எங்கள் ஊதியத்திற்காகதான் உங்கள் உழைப்பு...
உங்கள் பெயருக்கு பின்னால் இந்திய ஆட்சி பணி,
நீங்கள் வந்த பின்பு தானே தொலைந்தது எங்களை
பிடித்த பிணி...!
தொழிலாளிக்கும் தொழிற்கல்வி சாத்தியமானது,
வறுமை உயர்கல்விக்கு தடையில்லை என்பது
சத்தியமானது...
NAAC ஐயே மூக்கில் மேல் விரல் வைத்தது,
A கிரேடால் பல்கலைக்கழகம் புத்துயிர் பெற்றது...
ஏற்றத்தாழ்வில்லா சமநிலை சமன்பாடு,
அரசு முறையில் இடஒதுக்கீடு...
தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை,
இது தானே மக்களின் நெடுநாள் வேட்கை...
நிர்வாகம் சீரானது, உண்மையும் உழைப்பும்
பல்கலைக்கு ஆணிவேரானது...
மாணவர் நலனே உயிர் மூச்சு,
விடுதியெங்கும் மாணவர்கள் உங்களை பற்றியே
பேச்சு...
புலங்கள்தோரும் மாணவர் நல மையம்,
குறைகளை சொல்ல குறுந்தகவல் சேவை,
வருகைபதிவில் நவீன தொழில்நுட்பம்,
தேர்வு முறையில் புதுமை,
இது உங்கள் சாதனை பட்டியலின் தொடர் கதை,
கடின உழைப்பிற்கு நீங்கள் தானே முதல் விதை...நன்றி!
நன்றி!! நன்றி!!!




JAC MATHIYALAGAN


வீரவணக்கம் ஷிவ் தாஸ் மீனா அவர்களே !!
அன்பு சகோதர ,சகோதரிகளே
வணக்கம் கீழே உள்ள படத்தை பாருங்கள் !!இதில் இருந்து
பல பாடங்களை நாம் படிக்க வேண்டும் !!எந்த கருத்தாக
இருந்தாலும் ஆழ்ந்து சிந்தித்து அதன் உட்பொருளை
உணர்ந்து கொண்டு அதன் மீது நடவடிக்கை
எடுப்பதாகட்டும் !!அவருக்கு நிகர் அவர்தான் !!
அவர் இங்கே வந்தபோது அவருக்கு இழைக்கப்பட்ட
அவமானம் !!JAC அவரை அங்கிகரித்தவிதம் இங்கு நடந்த
ஊழல்களை எடுத்து சொல்லி அனைத்தையும் அவர்க்கு
விளக்கிய விதம் ,அவர் எந்த பாதையில் பயணம் செய்தால்
நன்றாக இருக்கும் என்று அவருக்கு சொன்னபோது
அதன் உண்மையை உணர்ந்து கொண்டு செயல்பட்டவிதம் !!
இங்கே ஊழல் பேய்கள் பல இருக்கும் போது அவர்களை
எல்லாம் சரியாக இனம் கண்டு ஒதுக்கி பதிவாளராக
பஞ்சநதத்தை தேர்ந்தெடுத்த போதே புரிந்து போனது
அவரின் சீர் தூக்கும் ஆற்றல் !!அடுத்த மாதம் முழு சம்பளம்
வருமா என்று பயந்து இருந்தபோது ஆபத்து பாந்தனாய்
வந்து 3 ஆண்டுகள் முழு சம்பளத்தை வழங்கிய வள்ளல்
,இவர் தான் 1௦௦௦0க்கும் மேற்ப்பட்ட மக்கள் நல
பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியவர் அரசு
இவரை போட்டு ஆட்களை குறைக்க போகின்றார்கள்
என்று புலம்பிய நம்மை ,போலி சான்றிதழில் கூட
மனிதாபிமானம் பார்த்த மகானாக காட்சி தந்தார் !!ஒரு
பக்கம் நிதிநிலை மோசம் !!மறுபக்கம் ஊழல்
பெருச்சாளிகள் ஒருபக்கம் !! நிச்சயமில்லா வாழ்வின்
விரக்திநிலையில் ஊழியர்கள் மறுபக்கம் !!

என்ன
மாயாஜாலம் அனைவரையும் தவமாய் வேலை செய்ய
வைத்து NAAC ---A கிரேடு நினைக்கவே எதோ கனவில்
நிகழ்ந்த அதிசயமாய் !!
வரும்போதும் அழுதோம் !! ஐயோ !! இவரை
போட்டுவிட்டார்களே !!என்ன நடக்கபோகிறதோ என்று !!
நீங்கள் போகும் போதும் அழுகின்றோம் !!
ஐயோ!! எங்கள் குல சாமி போகின்றதே என்று !!
மறக்க மாட்டோம் ஐயா !! உம் செம்மார்ந்த பணியை
பல்கலைக்கழகம் உள்ளவரை !!
உம் வாகனதிற்கே கால் வலித்திருக்கும் ஐயா !!
சிதம்பரம் TO சென்னை சென்றதை நினைத்து ,வாய்
இருந்தால் கதறி அழுதிருக்கும் !! எமக்கு சம்பளம் போட
நீ அலைந்ததை நினைத்து !!
தூற்றும் ஒரு சிலரே ,
என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் _-உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு .
திருவள்ளுவரின் சாபமே போதும் உமக்கு !!





JHON ANBU SELVAN


சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை சீர் படுத்திய
மாமனிதர் உயர் திரு அய்யா சிவ்தாஸ் மீனா அவர்கள்!
மாபெரும் சபையில்
நீ நடந்தால்!
உனக்கு மாலைகள்!
விழ வேண்டும்!
ஒரு மாசு குறையாத!
மன்னவன் நீ என போற்றி புகழவோண்டும்!
12500 ஆசிரியர்
ஊழியர்களுக்கு தன்
உடல் பொருள் ஆவி
அணைத்தும் தந்த மனிதர்! நீர் எங்கிருந்தாலும் வாழ்க!
2013 என்றாலோ
!உங்கள் ஞாபகம் வரும்!
எனக்கு கடவுள்
நம்பிக்கை இல்லை
ஆனாலும் நீங்கள் கடவுள் தான்!
மனித சக்திர்க்கு
அப்பாற்பட்ட தெய்வ சக்தி இருக்கு அது நீங்கள் தான்!
காலம் உள்ளவரை
எங்கள் ஊழியர் உங்களுகளை மறக்கமாட்டான்!
நீர் வாழ்க!நன்றி! நன்றி!! நன்றி!!
பல்லாண்டு காலம்!




ASHOK KUMAR 
III B.SC AGRI

சிதம்பரத்தில் இரு பெரும் கோவில்கள் உள்ளன அதில்
ஒன்று நடராஜ பெருமான் கோவில்.மற்றொன்று நம்
அண்ணாமலை கோவில்
அவ் அண்ணாமலை பல்கலைக்கழகம் என்ற கோவிலை
மீட்டெடுக்க வந்த உன்னதர் .., அகதியாக நின்ற நம்மை
வழிகாட்டவும் , காக்கவும் .. வந்த மாபெரும் உயர்
அதிகாரி , நம் பல்கலைக்கழகத்திற்கு நேர்மை என்ற
சொல்லிற்கு இவரும் ஒரு அடையாளம் ....
எனவே இவர் சென்றாலும் கூட என்றும் அவர் வழியில் ....
திரு. சிவ் தாஸ் மீனா IAS
by அசோக்குமார்
இளங்கலை (வேளாண்மை) 3ம் ஆண்டு





BASKAR RAJARAM
AUTA GENERAL SECRETARY


பாரம்பரியம் மிக்க நம் அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்தில் பல பிரச்சனைகள் வந்து ஆசிரியர் ஊழியரகள்
எல்லாம் திக்கு தெரியாமல் நின்ற போது
பிரச்சனைகளை சரி செய்ய வந்த மதிப்பிற்குரிய
திரு.சிவதாஸ் மீனா IAS அவர்களுக்கு என்
எண்ணங்களையும்,நன்றியையும் இந்த தருணத்தில்
சமர்ப்பணம் செய்கிறேன். நீங்கள் பல திறமைகளை
தன்னகத்தே கொண்ட ஒர் நிர்வாக அதிகாரி. பாடம்
நடத்தும் எங்களுக்கு உங்களின் ஆளும் திறன் சொல்லி
கொடுத்தது பல பாடங்கள். ரத்ததான முகாமை
தொடங்கி வைத்து புகைபடத்துடன் தன் பணி
முடிந்தது என்று செல்லாமல் நீங்களே ரத்ததானம்
கொடுத்து அனைவரையும் ஊக்கப்படுத்தியது உங்கள்
உதவும் பண்பை காட்டியது. Equal oppurtunity cell,SC/ST Cell,
Internal quality assurance cell,Students welfare &Grievance Redressal
cell,Research& development cell புத்துணர்ச்சி ஏற்றப்பட்ட
placement cell என்று நிறுவி பலரின் உடம்பில் ஒடும்
செல்களை புதுப்பித்தபோது உங்களை செயல் வீரர்
என்று உலகுக்கு காட்டியது.Annamalai University Radiance-
In-house Magazine (AUra) வை வெளியிட்ட போது சிறந்த
சிந்தனையாளர் என்பதை எங்களுக்கு புகத்தியது.
பல்கலையில் ஒளிவுமறைவற்ற ஒற்றைசாளரமுறையை
அறிமுகப்படுத்தி ஏழை மாணவமணிகள் பயன்பாட்டுக்கு
நடைமுறைபடுத்தியபோது உலகிற்கு தெரிந்தது
நீங்கள் நேர்மையானவர் என்று. நான் துறை தலைவரா
என்று தன்னைதானே கிள்ளி பார்க்கும் அளவிற்கு
பலருக்கும் வாய்ப்பளித்தபோது புரிந்தது மக்களின்
மனதை புரிந்தவர் என்று. தேர்வு கட்டுப்பாட்டு
துறையில் களைகள் பல எடுத்து யாராவது தவறு
செய்தால் அவர்களே மாட்டிக்கொள்ளும் அளவிற்கு
செய்த ஏற்பாடுகள் எல்லாம் வெளிபடுத்தியது நீங்கள்
ஒரு ராஜ தந்திரி என்று. உங்களின் சிந்தனையும்,பேச
்சும் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கி
சென்று கொண்டிருந்த நேரத்தில் காலத்தின கட்டாயம்
ஆனது உங்களின் பிரிவு. உங்களின் உடன் பணி் புரிந்த
மதிப்பிற்குரிய DRO Sirs Dinesh ponraj Oliver, Chirsthuraj,
Rathinasamy and Madam Malini அவர்களின் ஒத்துழைப்பும்,
கால நேரம் பார்க்காமல் புரிந்த பணிகள் எல்லாம்
எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. அண்ணாமலை
பல்கலைக்கழகத்திற்காக பணிபுரிந்தவர்கள், என்று பலர்
இருந்தாலும்,பிரச்சனைக்குரிய நேரத்தில் உங்கள்
குடும்பத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் எங்களுக்கு
பக்கபலமாக. இருந்த உங்களுக்கும் உங்கள்
துணைவியாருக்கம்,குடும்பத்தினருக்கும் நன்றியை
காணிக்கையாக்குகிறோம் கனத்த இதயத்துடன்
பிரியாவிடை கொடுக்கும் ஆசிரியர் ஊழியர்கள் சங்கம்.

இப்படிக்கு ஆட்டா பொதுசெயலாளர் முனைவர்.இரா்
பாஸ்கர்.




G.K.DINESH IV B.SC agri 

Students welfare member and Vikatan Student Reporter and Photographer



I'm very proud to stay in chidambaram

I'm very proud to study in ANNAMALAI UNIVERSITY

I'm very proud to have you as an Administrator of my university

Even though I saw your face for few times. Whenever I turned towards Admini building.  My vision visualises you...

I have learned a good leadership quality and administration skill from you sir.

You're one of the best role model!

You regained the proud and prestige to AU

Golden era of AU is because you sir!

We celebrates you forever sir!

IF ANNAMALAI UNIVERSITY IS ANOTHER TEMPLE IN CHIDAMBARAM

YOU'RE THE ANOTHER NATRAJAR !

You're a visible god!

We really miss you sir.....................................





THANK YOU SO MUCH SIR FOR BEING A GOOD ROLE MODEL FOR NEARLY 25,000 PEOPLES

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ »»»»»»»»Aufastudents@gmail.com««««««« Www.facebook.com/AnnamalaiUniversityFacultyOfAgriculture

No comments:

Post a Comment