Monday, 8 June 2015

ANNAMALAI UNIVERSITY got GUINNESS by releasing 351 books at a time

" அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனும் நெடுநின்ற
வரலாற்றின் முகவரியை அல்ல, முதல் வரியை கூட எவராலும் அழிக்க முடியாது.............!!!!"- Sivasakthivelan Panneerselvam

ஒரே நாளில் 351 நூல்கள் வெளியீடு: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனை !

சிதம்பரம்: சிதம்பரம்
அண்ணாமலைப்
பல்கலைக்கழக
தமிழியல்துறை யும்,
மலாயாப் பல்கலைக்கழக
இந்திய ஆய்வியல்துறையும்,
கலைஞன் பதிப்பகமும்
இணைந்து
தமிழறிஞர்களை பற்றிய
351 நூல்களை ஒரே
நேரத்தில் வெளியிட்டு
கின்னஸ் சாதனை படைத்த நிகழ்ச்சி நேற்று (ஜூன் 5,
2015 ) நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக
தமிழியல்துறை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய
ஆய்வியல் துறை, வைரவிழா காணும் சென்னை
கலைஞன் பதிப்பகம் ஆகியவை இணைந்து இரண்டு
நாள் பன்னாட்டு கருத்தரங்கை
வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது.
இக்கருத்தரங்கில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக
மறைந்த-வாழும் தமிழறிஞர்களின் வாழ்வும்,
பணியும் குறித்து 351 தமிழறிஞர்களால்
எழுதப்பெற்ற 351 நூல்கள் வெளியிடப்பட்டன.
பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செ.மணியன்
நூல்களை வெளியிட்டார்.
நுால்களை பெற்றுக்கொண்டு பேசிய கடலுார்
மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், “தமிழ் வெறும்
மொழி அல்ல. உயிராகவும், உணர்வாகவும் காலம்,
காலமாக கடந்து வந்துள்ளது. இறவாத புகழ்
படைத்தது தமிழ். தமிழ், தமிழ் என்று தொடர்ந்து
சொன்னால் அமிழ்து என வரும். அமிழ்தம்
சாப்பிட்டவர்களுக்கு இறப்பு கிடையாது. அதுபோல
தமிழறிஞர்களுக்கு இறப்பே வராது.
பல்வேறு அறிவியல் உண்மைகள் ஆங்கிலத்தில் மட்டும்
இல்லை. அப்போதே திருக்குறளில் அனுவை பிளக்க
முடியும், அதில் ஏழு கடல்களையும் அடக்க முடியும்
என தெரிவித்துள்ளார். இதனை விஞ்ஞானிகள்
இப்போதுதான் கண்டுபிடித்தனர். வேறு எந்த
மொழிக்கும் தமிழ் மொழி இணையாகாது.
தற்போது விஞ் ஞான காலத்திற்கு ஏற்றவாறு
ஆங்கில சொற்களுக்கு, புதிய தமிழ் சொற்களை
உருவாக்கி மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர
வேண்டும் என்றார்.
மலேசியா உலகத் தமிழாராய்ச்சி மன்றத் தலைவர்
டான்ஸ்ரீ த.மாரிமுத்து பேசும்போது, 351 நூல்கள்
ஒரே நாளில் வெளியிடப்பட்டது சரித்திர
நிகழ்வாகும். இது வித்தியாசமான,
அறிவுப்பூர்வமான நிகழ்ச்சியாகும். மலேசிய
தமிழறிஞர்களின் நூல்களும் இதில் இடம்
பெற்றுள்ளது பெருமையளிக்கிறது. 351 நூல்களும்
ஒரு வரலாற்று பெட்டகங்களாகும். இந்த ஆவணங்களை
இன்றைய தலைமுறையினர் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும்" என்றார்.
“கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய
மக்களுக்கு முகவரி அளித்த பல்கலைக்கழகமாக
அண்ணா மலைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது.
பல்கலைக்கழக நூல் வெளியீட்டுத்துறை கடந்த 10
ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை படைத்து
வருகிறது. தற்போது 351 நூல்களை வெளியிட்டு
நட்சத்திர சாதனை படைத்துள்ளது. அண்ணாமலைப்
பல்கலைக்கழக தமிழியல்துறை முன்மாதிரியாக
திகழ்கிறது” என அண்ணாமலைப் பல்கலைக்கழக
துணைவேந்தர் முனைவர் செ.மணியன்
தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலைஞன் பதிப்பகம் நந்தன்
மாசிலாமணி, பதிவாளர் ஜெ.வசந்தகுமார்,
தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் ராம.சந்திரசேகரன்,
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி
ஆ.ரகுபதி, சிதம்பரம் கோட்டாட்சியர்
பி.எஸ்.விஜயலட்சுமி, குடியரசுத்தலைவரின்
தொல்காப்பியர் விருது பெற்ற பேராசிரியர்
சை.வே.சண்முகம், பாவேந்தர் பாரதிதாசன் மகன்
மன்னர் மன்னன், பேராசிரியர் ஆறுமுகனார்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒரே நேரத்தில் 351 புத்தகங்கள் வெளியிட்ட
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பணி தமிழ்
மொழிக்கான ஒரு சிறப்பான அலங்காரம்.
பாராட்டலாம் பல்கலைக் கழகத்தை!
.
.
.
-ஜி.கே.தினேஷ் ( விகடன் மாணவப் பத்திரிகையாளர்) Gk DineshKavipaadi
.
.
# Annamalai # Proud # Guinness
.
.
.
https://m.facebook.com/vikatanweb/photos/a.190403194351812.47794.189960617729403/937976132927844/?type=1&source=46&refid=17
.
.
ANNAMALAI UNIVERSITY GOT GUINNESS

No comments:

Post a Comment