Friday 20 March 2015

Farmer - Poem விவசாயி - கவிதை

உழைத்து, உழைத்து ஓடாய்
தேய்ந்து அரைவயிறு உணவு உண்டு,
அடுத்தவருக்கு வயிறார
உணவு குடுக்கிறாய்...!!

வெயில்
பட்டு மேனி கறுத்து விடும்
என்று க்ரீம் பூசிக் கொண்டு வரும்
உலகில், சுட்டெரிக்கும் வெயில்
முழுவதும் உன் உடலில் தானடி...!!

கற்பக்காலத்தில் தாயவள்
குழந்தையை காப்பது போல
காத்து அந்த நெல்
மணிகளை பாதுகாக்கிறாய்...!!

விவசாயத்தில் மழைநீர்
மட்டுமா விழுந்தது,
இல்லை உனது வியர்வை துளிகளும்
தானடி விழுந்து விளைச்சல்
ஆனது..!!

-யாரோ

No comments:

Post a Comment