Saturday 28 March 2015

Thanks for allotting budget for Annamalai University

அண்ணாமலைப் பல்கலை.க்கு சிறப்பு நிதி:ஆசிரியர்-
ஊழியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு நன்றி

By சிதம்பரம்,

First Published : 28 March 2015 03:48 AM IST

தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு நிதி
ஒதுக்கியதற்காக ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டு
நடவடிக்கைக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டு
நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன்
சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிட
ையே கூறியதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பழைய நிர்வாகச்
சீர்கேட்டினால் நிதிச்சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டு
நடவடிக்கைக்குழு தொடர் போராட்டத்தால், அபோதைய
முதல்வர் ஜெயலலிதா புதிய சட்டம் இயற்றி
பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு
வந்தார்.
மேலும் தமிழக அரசு இட ஒதுக்கீடு மற்றும் ஒற்றைச்
சாளர முறையில் மாணவர் அனுமதிச் சேர்க்கையை
செயல்படுத்திய பெருமை அவருக்கு உண்டு.
இந்நிலையில், மார்ச் 25-ம் தேதி சட்டப்பேரவையில்
தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு நிதி
உதவியாக 2014-15ம் ஆண்டுக்கு ரூ.153.55 கோடியும்,
2015-16 ஆண்டுக்கு ரூ.110.57 கோடியும் வழங்குவதாக
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதற்கு ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு
சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்பட
வேண்டிய பணிப்பயன், அகவிலைப்படி
நிலுவைத்தொகை, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புத்
தொகை, ஓய்வூதியர்களின் சலுகைகள் மற்றும் பதவி
உயர்வுகள் எதுவும் கடந்த 3 ஆண்டுகளாக
வழங்கப்படவில்லை.
அதனை விரைவில் வழங்க வேண்டும். 1996-ம் ஆண்டு
வரையுள்ள ஆசிரியர்-ஊழியர்கள் எண்ணிக்கைக்கு
ஏற்பு அளிக்கப்படும் தொகுப்பு நிதியை, தற்போதுள்ள
மாணவர்கள், துறைவாரியான படிப்புகளின்
எண்ணிக்கை அடிப்படையில் 2014-ம் ஆண்டு வரை
ஆசிரியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உயர்த்தி
வழங்க வேண்டும்.
கடலூர், நாகை, அரியலூர் மாவட்ட மக்களின் நல்வாழ்வை
பேணிக் காத்திட உள்நோயாளிகள் 1,200 பேர் தங்கும்
வகையில் படுக்கை வசதி கொண்டு ஆசியாவின்
இரண்டாவது பெரிய மருத்துவமனையாக திகழும்
அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையை கடலூர் மாவட்ட அரசு தலைமை
பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாகவும்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு கீழ் இயங்கும்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும் மாற்றும்
விதமாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க
வேண்டும்.
மேலும், பல்கலைக்கழகத்தில் நிதிச்சிக்கல் தீரும் வரை
சில ஆசிரியர்-ஊழியர்களை தமிழகத்தில் வேறு கல்வி
நிறுவனம் மற்றும் அரசு துறைகளுக்கு தேவைப்படும்
இடத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு பணியிட மாற்றம்
செய்ய வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள தாற்காலிக
நிதிச்சிக்கலை தீர்க்க ஒரு சிறப்பு நிதியை ஒதுக்க
வேண்டும் என சி.மதியழகன் தெரிவித்தார்.
அப்போது ஊழியர் சங்க பொதுச்செயலர் ரவி, ஆசிரியர்
சங்க பொதுச்செயலர் பாஸ்கர், ஊழியர் சங்க இணை
பொதுச்செயலர் துரை, ஓய்வூதியர்கள் சங்க
பொதுச்செயலர் கலியபெருமாள் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

நன்றி : தினமணி

No comments:

Post a Comment